This is only for who are trying to develop their knowledge

Monday 11 July 2016

Story

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Story

தமிழ்&ஆங்கில வழி}
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு
எடுத்துக் கொண்டிருக்கும்
போது ஒருவர் வந்து
அவருடைய நண்பரைப் பற்றி
ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , "
என் நண்பரைப் பற்றி என்னிடம்
கூற விரும்பினால் அதற்கு
முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என
பதில் இருந்தால் மட்டுமே
நீங்கள் அவரைப் பற்றி
கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை
கேட்டார்
"அவர் செய்த செயலை
நேரடியாகப் பார்த்துவிட்டு
தான் அவரைப் பற்றி
கூறுகிறாயா ?" என்று
கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அவரைப் பற்றிய நல்ல
விஷயத்தை
கூறப்போகிறாயா? " என்று
இரண்டாவது கேள்வியைக்
கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அந்த நண்பரைப் பற்றி என்னிடம்
கூறினால் யாராவது
பயனடைவார்களா......???" என்ற
மூன்றாவது கேள்வியைக்
கேட்டார்.
இதற்கும் இல்லை என்றே பதில்
வந்தது.
"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை
தயவு செய்து என்னிடம்
கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு ஆரோக்கியமான
விவாதங்களையே
மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன்
வாயுவினால் நிரப்பப் பட்ட
பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ
பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக்
கொள்ளுங்கள்.....!!!
உலகில் சிறு தவறு கூட
செய்யாதவர்களே இல்லை.
மேலும் மன்னிக்க முடியாத
குற்றம் என்றும்
ஏதுமில்லை........!!!
எனவே,
வார்த்தைகளால் யாரையும்
பழிக்காதீர்கள்......!!!
வசவுகளால் இதயங்களை
கிழிக்காதீர்கள்.......!!!
நல்லுறவை வன்முறையால்
இழக்காதீர்கள்.......!!!
நட்புறவை இழிமொழியால்
துளைக்காதீர்கள்.......!!!
மனிதர்கள் ரத்தமும், சதையும்,vv
உணர்ச்சிகளாலும்
உருவாக்கப்பட்டவர்கள்.
நீங்கள் யாரையும் இழந்து
விடாதீர்கள்.........!!!

Story

*ஒரு குட்டிக்கதை*


ஒரு ஊரில்  தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி  போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே  அவரது  அடையாளம் ....

     வீதியில் அவரைக்  கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...

 ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும்  ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால்  மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது  கூட உண்டு....

 ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார்....

 அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்....

          அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து  , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது....

 இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது.  இன்று  இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்....

       " என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்...

 அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார்...

 பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

          வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வேலையை ஆரம்பித்தார்...

       பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று  எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார்...

" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி   வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு  சொல்றாங்க ?  "

 இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
           
             "நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "

            இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
 இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.....

  இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

          " எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " .
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

 அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம் .
          இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

         இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.  பண்டிதரின்  பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.....

         கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை  வழித்தெடுத்து அவர் கையில்  கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்....

                நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"

       இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
        நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ".  என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்....

             நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது....

          கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக்  கட்டினார்...

 நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.  இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்....

உங்களில்   ஒருவன்...

Wednesday 6 July 2016

News about SUN & MOON

நிலவு, சூரியன் பற்றிய சில தகவல்கள்:-
1. நிலவு :
🌝 நிலவின் ஈர்ப்பு விசையால் உருவாவது - கடல் அலைகள்
🌝 நிலவு பற்றிய படிப்பு - செலினாலஜி
🌝 நிலவு எத்தகை ° செய்து பூமியை வலம் வருகிறது - 5°
🌝 எவரெஸ்ட் விட உயரமான மலைகள் நிலவில் காணப்படுகிறது அதன் பெயர் - லீப்னிட்ஸ் மலை (10,660 மீ)
🌝 நிலவின் மறு பக்கத்தை படம் பிடித்த செயற்கை கோள் - லூனா 3(1959)
🌝 நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங்
🌝 நிலவில் சென்ற முதல் 3 மனிதர்கள் - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ்
🌝 நிலவின் மனிதன் காலடி வைத்த ஆண்டு - 1969 ஜூலை
🌝 நிலவுக்கு மனிதனை அழைத்து சென்ற செயற்கை கோள் - அப்போலோ 11
🌝 நிலவொளி பூமியை வந்தடையும் நேரம் - 1.3 நொடி
🌝 நிலவில் அதிக அளவு உள்ள தனிமம் - டைட்டானியம்
2. சூரியன்:
🌞 சூரியன் பற்றிய படிப்பு - ஹீலியாலஜி
🌞 சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் - 8 நிமிடம் 16.6 நொடி
🌞 சூரியனில் அதிக அளவு உள்ள தனியம் - ஹைட்ரஜன் 92%, ஹீலியம் 8%
🌞 சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது - ஓசோன்
🌞 சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் - பிராக்சிமா செண்டாரி
🌞 சூரிய வெப்பநிலை அலக்கும் கருவி - பைரோஹீலியோ மீட்டர்
🌞 நடுவயது நட்சத்திரம் - சூரியன்
Thanks: education fb 

ONE MARK TEST SCIENCE EM JUNE 2016


ONE MARK TEST SCIENCE EM

ONE MARK SCIENCE EM

JUNE MONTHLY TEST ---10 SCIENCE EM

JUNE MONTHLY TEST ---10 SCIENCE EM
LESSON 1,10

Friday 1 July 2016

புத்தகங்கள் மாணவர்களுக்கு,:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள...
அறிவியல்,  கல்வி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வகை நூல்கள்..
ஆர்வமுள்ள நண்பர்களின்
தகவல்களுக்காக...
1. பிரபஞ்சம்
அறிவியல் வெளியீட்டு குழு
ரூ.75
2. நியூட்ரினோ
டி.வி.வெங்கடேஷ்வரன்
ரூ.90
3. காலநிலை மாற்றம்
பேரா.எஸ்.மோகனா
ரூ.15
4. இயற்கை வளக் கொள்ளையைத்
தடுப்போம்‘-
நலவாழ்வு யார் கையில்
பேரா.பொ.ராஜமாணிக்கம்
ரூ. 25
5. மரபணு மாற்றுத்தொழில் நுட்பம்
முனைவர் எஸ்.தினகரன்
ரூ.10
6. இந்திய விவசாயத்தைப் பாதுகாப்போம்
எல்.பிரபாகரன்
15
7. அரசு வங்கிகளைப் பாதுகாப்போம்
கு.செந்தமிழ் செல்வன்
10
8. செய்கூலி சேதாரம்
முனைவர் என்.மாதவன்
50
9. இந்திய கல்வி வரலாறு
எஸ்.சுப்பிரமணி


35
10. அமிர்தா பள்ளிக்கு போகனுமா.
-டி.வி.வெங்கடேஷ்வரன்
35
11. எடுத்தேன் படித்தேன் கதைகள்- மு.முருகேஷ்
35
12. புலிக்கு கோடுகள் வந்தது
டி.வி.வெங்கடேஷ்வரன்
45
13. விழிப்புணர்வு பாடல்கள்
-எஸ்.டி.பாலகிருஷ்ணன்
70
14. புதிய பூமி சுடாத  சூரியன்
பேரா.எஸ்.மோகனா
60
15. நிறமாலை
த.வி.வி
50
16. கிறுக்குச் சண்முகம் / எட்டரை
வேல ராமமூர்த்தி , மேலாண்மை பொன்னுச்சாமி
ரூ. 25
17. இரவல் நகை / கடைசி இலை
மாபாசான் / ஒ ஹென்றி
ரூ. 20
18. ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி
ரூ. 20
19. காய்ச்ச மரம் / வேரின் துடிப்பு
கி.ராஜநாராயணன் / ஆண்டர்சன்
ரூ. 20
20. அம்மா அண்ணா காப்பாத்துங்க / ஏகலைவன் கதை
ச,மாடசாமி/எம்.மணிமாறன்
ரூ. 20
21. முதற்றே உலகு
முனைவர் எஸ்.தினகரன்
ரூ. 60
22. ஆசிரிய முகமூடி அகற்றி
பேரா எஸ்.மாடசாமி
ரூ. 60
23. மாங்கா மடையன் மடல்கள்
ஆயிஷா நடராஜன்
ரூ. 50
24. தன்னம்பிக்கையோடு வாழும் நிக்வோயிசிக்...
ஏற்காடு  இளங்கோ
ரூ. 50
25. உலகப் புகழ்பெற்ற பெண்கள்
ப.ரவிச்சந்திரன்
ரூ. 80
26. உலகை மாற்றிய உயிரியல் அறிஞர்
ப.ரவிச்சந்திரன்
ரூ. 40
27. மங்கள்யான்
டி.வெ.வெங்கடெஷ்வரன்
ரூ. 35
28. எங்கும் எதிலும் இயற்பியல்
சி.எஸ்.வெங்கடேஷ்வரன்
ரூ. 45
29. புளுட்டோவின் புதிய முகம்
டி.வெ.வெங்கடெஷ்வரன்
ரூ. 30
30. காவிரி டெல்டா மீத்தேன் திட்டம்
பி.கே.ராஜன் / சேதுராமன்
ரூ. 15
31. டார்வின் உயிரியல் பரிணாமம்
அறிவியல் வெளியீடு குழு
ரூ. 20
32. நாஞ்சில் மன்னன்
பி.ஆர்
ரூ. 25
33. இந்திய மருத்துவம் நேற்று இன்று
டாக்டர் இக்பால்
ரூ. 130
34. நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும்
யோனா ப்ரீட்டேன்
ரூ. 75
35. பி.டி.கத்தரி
டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி
ரூ. 15
36. உயிரின் உயிரே
பேரா பொ.ராஜமாணிக்கம்
ரூ. 60
37. உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்....
ஏற்காடு இளங்கோ
ரூ. 35
38. தனிமங்கள்
பேரா எஸ்.மோகனா
ரூ. 35
39. சோதிடமும் வானியலும்
பாப்புட்டி / தமிழில் ரமணி
ரூ. 60
40. சமையலறையில்  விஞ்ஞானம்
ச.தமிழ்செல்வன்
ரூ. 60
41. சிந்துவின் கதை
எம்.பி.பரமேஸ்வரன்
ரூ. 35
42. எடிசனைப் பற்றி
பி.பி.கே.பொதுவால்
ரூ. 45
43. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
சி.எஸ்.வெங்கடேஷ்வரன்
ரூ. 50
44. அன்றாட வாழ்வில் அறிவியல்
ச.தமிழ்செல்வன்
ரூ. 40
45. இயற்கைச் சமுதாயம் விஞ்ஞானம்
கே.கே.கிருஷ்ணகுமார்
ரூ. 80
46. வாழ்வே அறிவியல்
கே.கே.கிருஷ்ணகுமார்
ரூ. 80
47. எதனாலே எதனாலே
எஸ்.ஜனார்த்தனன்
ரூ. 90
48. ஏன்..? எப்படி..?
கேள்வி பதில் தொகுப்பு
ரூ. 100
49. உங்களுக்குத் தெரியுமா..?
கேள்வி பதில் தொகுப்பு
ரூ. 90
50. கேள்விக்கு  நீ பதிலுக்கு நான்
வானொலித் தொகுப்பு
ரூ. 80
51. யுரேகா யுரேகா
கேள்வி பதில்
ரூ. 100
52. மந்திரமா? தந்திரமா?
ரூ. 75
53. எளிய அறிவியல் பரிசோதனைகள்
காத்தவராயன்
ரூ. 30
54. இவைகளா கனவுப் பள்ளி
பி.ஆர்.
ரூ. 15
55. மீண்டெழும் அரசுப் பள்ளி
மணி
ரூ. 15
56. ஐசான் வால் நட்சத்திரம் காண்போம்
சி.ஆர்.
ரூ. 15
57. வருகிறது ஐசான் வால் நட்சத்திரம்
பார்த்தசாரதி
ரூ. 35
58. பூமியின் வடிவத்தைக் கண்டறிவது எப்படி?
ரூ. 70
59. புதிய கல்விக் கொள்கை-2016
ராமானுஜம், பி.ஆர்.
ரூ. 20
60. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள்
ஏற்காடு இளங்கோ
ரூ. 40
61. ஹெலன் ஹெல்லர்
ஏற்காடு இளங்கோ
ரூ. 50
62. கொஞ்சம் கேள்வி நிறைய பதில்
முனைவர், தினகரன்
ரூ. 40
63. கண்ணாமூச்சி விளையாட்டு
கே.காத்தவராயன்
ரூ. 40
64. ஒளி விளையாட்டு
பாலகிருஷ்ணன்
ரூ. 20
65. அறிவியல்  குழந்தைப் பாடல்கள்
பி.ஆர், மொ.பா, எஸ்.டி.பி
ரூ. 20
66. அறிவியல் பார்வை
பி.ஆர்
ரூ. 15
67. சூடேறும் பூமி
பி.ஆர்
ரூ. 20
68. அடுக்களை அறிவியல்
பேரா.மோகனா
ரூ. 50
69. நறுமணங்கள்
பேரா.மோகனா
ரூ. 40
70. பிளேக் மாரி (கேள்வி பதில்)
முனைவர் தினகரன்
ரூ. 30
71. டைபாய்டு மேரி
(கட்டுரைத் தொகுப்பு)
முனைவர் தினகரன்
ரூ.30 
ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்
1. டோட்டோசான் – என் பி. டி
2. பகற்கனவு – என். பி. டி.
3. குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் -                                           கிழக்கு பதிப்பகம்
4. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் – லதா ரஜனிகாந்த்
5. இது யாருடைய வகுப்பறை – ஆயிஷா நடராஜன்
6. எனக்குரிய இடம் – சா. மாடசாமி
7. ஓர் ஆசிரியரின் டயரி – பாரதிய புத்தகலயா
8. வகுப்பறைக்கு வெளியே – தட்க்ஷிணா மூர்த்தி
9. உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி. ராஜேந்திரன்
10. ஆயிஷா – நடராஜன்

. Thanks kalvirk