This is only for who are trying to develop their knowledge

Tuesday 20 September 2016

பூமியின் தோற்றம்

பூமியின் தோற்றம்.

முதலில் அண்ட வெளியில் இருந்த அனைத்தும் வெப்பம் மிகுந்த ஒரு கோளமாக இருந்தது. திடீரென இது வெடித்த்போது பெரு வெடிப்பு நிகழ்ந்தது. அந்த நேரத்தில் பொருள் எதுவும் இருக்கவில்லை. ஒளி மட்டுமே இருந்தது.
ஒரு வினாடி முதல் 30 லட்சம் ஆண்டுகள் வரை - அண்ட வெளி குளிர்ச்சி அடைந்தபோது புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூட்ரான்கள் ஆகியவை தோன்றின. இவை ஒன்றிணைந்து முதல் அணுக்கள் உருவாகின. இவ்வணுக்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அணுக்களாக இருந்தன. சில லித்தியம் அணுக்களும் இருந்தன.
30 லட்சம் முதல் 200 கோடி ஆண்டுகள் வரை - ஈர்ப்பு விசை இந்த அணுக்களை பிரம்மாண்டமான வாயு மேகங்களாக ஆக்கியது. இவ்வாயு மேகங்கள் பின்னர் நட்சத்திர மண்டலங்களாயின. ஒவ்வொரு மண்டல்த்தின் உள்ளேயும் ஈர்ப்பு விசை செயல் பட்டு அணுக்களை மேலும் நெருங்கச் செய்து சிறு சிறு வாயு மேகங்களை உருவாக்கியது.
200 கோடி முதல் 500 கோடி ஆண்டுகள் வரை - இந்த வாயு மேகங்கள் சுருங்கியபோது அவற்றின் மையப்பகுதியிலிருந்த வெப்பம் உயர்ந்தது. ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியது. இதனால் மிகப் பெருமளவு வெப்பமும், ஒளியும் உண்டாயிற்று. அண்டவெளியின் முதல் நட்சத்திரங்கள் பிறந்தன. ஆனால் இந்த அற்புதக் காட்சியைக் காண ஒருவரும் இல்லை. உயிரினங்களைத் தோற்றுவித்த கார்பன், இரும்பு, ஆக்சிஜன் அணுக்கள் இன்னும் உருவாகவில்லை. அண்டவெளி எங்கும் ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே நிரம்பி இருந்தன.
700 கோடி ஆண்டுகள் - ஆனால் முதல் நட்சத்திரங்களிலிருந்த ஹைட்ரஜன் எரிந்த போது கார்பன், ஆக்சிஜன், இரும்பு ஆகியவை உருவாகின. அவை சூப்பர் நோவாக்களாக வெடித்த போது இந்த புதிய அணுக்கள் அண்ட வெளியெங்கும் சிதறி பரவின.
800 கோடி ஆண்டுகள் - ஈர்ப்பு விசையின் காரணமாக மீண்டும் இந்த அணுக்கள் ஒன்று திரண்டு வாயு மேகங்கள் ஆகின. இந்த வாயு மேகங்கள் சுருங்கவும், சுழலவும் வெப்பமடையவும் தொடங்கின.
1000 கோடி ஆண்டுகள் - இது போன்ற ஒரு வாயு மேகத்தின் மையப்பகுதியில் இருந்த ஹைட்ரஜன், திடீரென்று ஹீலியமாக மாறத் தொடங்கியது. இப்படியாக நமது சூரியன் பிறந்தது. சூரியனைச் சுற்றி வந்த வாயு மேகத்திலிருந்த அணுக்கள் ஒன்றிணைத்து சிறு கற்களாகின. அந்த சிறுகற்கள் ஒன்றிணைந்து சிறு பாறைகளாகின. அந்த சிறு பாறைகள் ஒன்றிணைந்து பெரும் பாறைகளாயின. அப்படி உருவான ஒரு பெரும்பாறைதான் பூமி. அது வளர்ந்த போதுதன் அருகில் இருந்த அனைத்து பாறைகளையும் தன்னிடத்தில் ஈர்த்துக்கொண்டது. இவ்விதமாக பூமி ஒரு வெப்பமிகுந்த மாபெரும் கோளகாக உருவாகி சூரியனைச் சுற்றி வந்தது. ஆரம்பத்தில் உருகிய எரிமலையாக இருந்த பூமி குளிர்ந்து அதன் மேற்பரப்பு திடப்பட்டு நிலப்பரப்பாகியது. பூமியில் விழுந்த நீர் பெருங்கடல்களாக உருவாயிற்று. இந்த அடிப்படை அணுவியல்  உயிர்களின் தோற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது..

No comments:

Post a Comment